குருவிமலையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: எம்எல்ஏ , எம்.பி தொடக்கம்
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிக்கு மருந்துகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிமலை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
திருப்புகழி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள் மொழி தலைமையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட குழுவினர் அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் கண்டறிந்து அதற்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இம்மருத்துவ முகாமில் சித்தா, பல், காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு மற்றும் பொது மருத்துவம் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் இசிஜி , அல்ட்ரா ஸ்கேன் , டிஜிட்டல் எக்ஸ்ரே , காசநோய் கண்டறிதல் , இரத்தம் , எடை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டு அது குறித்த முடிவுகள் உடனுக்குடன் அளிக்கப்பட்டு அதன் பேரில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு உரிய மருந்துகள் வழங்கினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்கள் இம்முகாமில் கலந்து கொண்டதால், பொதுமக்கள் எளிதாக தங்களது மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச்சென்றனர். தற்போது காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உரிய ஆலோசனை வழங்கினர்.
இந்த மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார் , துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது , ஒன்றிய குழு உறுப்பினர் அன்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், களக்காட்டு ஊராட்சி மன்ற தலைவர் நளினி டில்லி பாபு, திமுக ஒன்றிய செயலாளர்கள் , குமணன் , வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், திமுக நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, ராஜகோபால், திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu