மருதம் கிராம ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு

மருதம் கிராம ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
X

மருதம் கிராம ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் மருதம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கட்சிப் பாகுபாடின்றி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுற்றத பரிசீலனை வாபஸ் என அனைத்தும் நிறைவுற்று நேற்று 273 கிராம ஊராட்சியில் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டடது மருதம் கிராமம். இக்கிராமத்தில் 349 ஆண் வாக்காளர்களும் , 339 பெண் வாக்காளர்கள் எனவும் மொத்தம் 688 வாக்காளர்கள் உள்ளனர். கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு பட்டியலின பொதுப்பிரிவினர் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ரமேஷ் என்பவரை தேர்வு செய்து ஊராட்சி மன்ற தலைவராக வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர். நேற்று மாலை 3 மணியுடன் வாபஸ் நிறைவு பெற்ற நிலையில் போட்டியின்றி திரு ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறு பிரச்சினைகளில் கூட கோஷ்டிகளாக செயல்படும் நிலையில் கிராம வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிமுக , திமுக , பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஜாதி, மத வேறுபாடுகளின்றி ஒரு வேட்பாளரை தேர்வு செய்தது இக்கிராம மக்களின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தினையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதேபோல் 273 கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டுகளில் உள்ள 1938 பேரில் 145 நபர்கள் வார்டு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil