மாகரல் : அதிவேக தொடர் வெள்ளப்பெருக்கால் பாலம் துண்டானது

மாகரல் :  அதிவேக  தொடர் வெள்ளப்பெருக்கால் பாலம் துண்டானது
X

செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்த பாலம்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் அதிவேக தொடர் வெள்ளப் பெருக்கால் உடைப்பு ஏற்பட்டு பாலம் துண்டானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்று தாழ்வுழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு வார காலமாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாறுகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது வரை நீர் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் மாகரல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றில் சுமார் 60 ஆயிரம் கன அடி நீர் கடந்த ஐந்து தினங்களாக சற்றும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 2015 இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இந்த பாலம் சேதம் அடைந்து துண்டிக்கப்பட்டு தற்காலிக நிவாரணமாக வீராணம் பைப் கொண்டு நீர் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது மேலும் மேம்பாலம் நெடுஞ்சாலைத் துறையால் புனரமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக செல்லும் அதிவேக வெள்ளப்பெருக்கால் இன்று காலை அப்பகுதி துண்டிக்கப்பட்டு இரு பகுதிகளாக காணப்பட்டது.

துண்டிக்கப்பட்ட வழியாக மேலும் அதிகமாக நீர் செல்கிறது. தொடர்ந்து அங்குள்ள தடுப்பணையை தாண்டி இன்னும் வேகமாக ஆறு முழுவதும் அதே வேகத்துடன் திருமுக்கூடல் பகுதியில் பாலாற்று டன் கலக்கிறது.

இதனால் காஞ்சிபுரம் உத்திரமேரூர் கீழ்ரோடு போக்குவரத்து மாகரல் வரை நிறைவுபெறுகிறது. அக்கரையிலுள்ள கிராம மக்கள் உத்திரமேரூர் பெருநகர் வழியாக காஞ்சிபுரம் வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil