வாலாஜாபாத் அருகே ஶ்ரீதிரிபுரசுந்தரி சக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
யாகசாலை பூஜைகள் நினைவிற்கு பின் கலச புறப்பாடு மற்றும் கும்பாபிஷேகம்.
காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம், இளையனார்வேலூர் ஊராட்சிக்குட்பட்ட சித்தாத்தூர் கிராமம் செய்யாறின் கரையோரம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி அம்மன் சமேத ஶ்ரீ சக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இத்திருக்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் மற்றும் கிராம பொதுமக்களால் புணரமைக்கபட்டது. இதன் நிறவையொட்டி நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கி மூன்று கால யாக பூஜையில் பல்வேறு மூலிகை பொருட்கள், ஹோம் பொருட்களால் விநாயகர், சக்தீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன் யாக குண்டலங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதன் நிறைவாக பூர்ணஹீதி நடைபெற்று கார்த்திகேய சிவாச்சாரிய குழுவினரால் கலச புறப்பாடு கண்டு கோயிலை வலம் வந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சக்தீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு மாக அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீப ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது , ஒன்றிய செயலாளார் குமணன், கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், திமுக நிர்வாகிகள் கோதண்டம், நாகப்பன், ஜெயமணி, தெய்வசிகாமணி, சதீஷ், விஜயன், பாண்டியன், பிரகாஷ் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவினை ஒட்டி பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu