காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று  விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு
X

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், பி.டி.சி. குடியிருப்பில் ஜெயகுமார் என்பவரது வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று ராஜேஷ்(35), ஏழுமலை(35), இருவரும் வந்துள்ளனர். இறங்கிய சில மணி துளிகளில் இருவருக்கும் விஷவாயு தாக்கி மயங்கி யுள்ளனர்.

அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரது உயிற்ற உடலையும் மீட்டனர்.

மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!