காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்

காஞ்சிபுரம் : ஓரிக்கை மணி மண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்
X

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் நடைபெற்ற சுயம்வர பார்வதி ஹோமம்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மாக பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.

காஞ்சி சங்காராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வேண்டுகோளின்படி மாதம் தோறும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவர்கள் நலமுடன் வாழவும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும் சுயம்வர பார்வதி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் வன்னிய குல சத்திரிய மக்களுக்கான சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்க தலைவர் ஆர்.டி.சேகர், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வன்னியர் குல சத்திரிய சமூகத்தை சேர்ந்த 80 குடும்பங்களின் உறுப்பினர்கள் சுயம்வர பார்வதி ஹோம நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பங்கேற்ற அனைவருக்கும் காமாட்சி அம்மன் திருஉருவப் புகைப்படம், குங்கும பிரசாதம் ஆகியனவும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture