காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
X

உத்திரமேரூரில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுர் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் உத்திரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்..சேகர் முன்னிலையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் குன்னூர் ஹெலிகாப்டர். விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் மூத்த தளபதி உள்ளிட்டோர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்ட செயலாரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற எடுக்க வேண்டிய செயல்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் அனைத்து நகர் , பேரூராட்சி , ஒன்றிய செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் வரும் 18ம்தேதி மேல்மருவத்தூரில் இன்னுயிர் காப்போம் எனும் திட்டத்தினை துவங்கி வைக்க வருகை தரவுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுராந்தகம் புறவழிச்சாலையிலிருந்து 10கீமி தூரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் , கிளை கழக தொண்டர்கள் சாலைகளில் சீன பெருஞ்சுவர் போல் நின்று உற்சாக வரவேற்க திட்டமிடப்பட்டது.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் அளித்தும் , நல திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன் , பி.எம்.குமார்,.சாலவாக்கம்குமார், குமணன், பூபாலன் ,நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி சுகுமார், தசரதன், மலர்மன்னன், மதுராந்தகம் குமார் மற்றும் நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் , மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அசைக்க முடியாத அடையாளம்..!திருச்செங்கோட்டில் 60-அடி திமுக கொடிக்கம்பம்..!