காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள் தஞ்சம்

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள்  தஞ்சம்
X

காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லூர் ஏரியில் தஞ்சம் கொண்டுள்ள பறவைகள் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் கிராம ஏரி நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பறவைகள் கூட்டம் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக கிராமங்களில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்போது அறுவடை முடித்து மீண்டும் பயிர் பருவம் துவங்கியுள்ளதால் நிலங்களில் விவசாயிகள் ஏர் உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பறவைகள் நிலங்களில் உள்ள மண்புழு நெல்மணிகள் உள்ளிட்டவைகளை உணவு உட்கொள்ள வரும் நிலையில் ஏரிகளில் உள்ள அடர்ந்த மரங்கள் உள்ளதால் மாலை நேரங்களில் அதிகளவு பறவைகள் தஞ்சம் அடைகிறது.

இவைகள் எழுப்பும் ஒலி கிராம மக்களுக்கு இனிமையாகவும் அதேநேரம் தங்கள் கிராமம் மற்றொரு வேடந்தாங்கலாக மாறியதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் இரை தேட கிளம்ப பறவைகள் எழுப்பும் ஓசை தாங்களும் அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளைப் பார்க்க இது பெரிதும் உதவுகிறது எனவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!