காஞ்சிபுரம் பகுதியில் கடல் போல் காட்சியளிக்கும் விவசாய விளை நிலங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கன மழை பெய்தது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் பாலாறு செய்யாறு , வேகவதி ஆறு உள்ளிட்டவைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் சென்று வருகிறது. மேலும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்களும், விதை தூவி வந்த விளை நிலங்களும் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட காவான் தண்டலம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் விளை நிலங்கள் இரண்டு ஏரிகளை நம்பி அப்பகுதி விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் செய்யாறு செல்லும் நீர் கால்வாய் வழியாக இந்த இரண்டு ஏரிகளுக்கும் வருவது வழக்கம்
தற்போது இந்த கால்வாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளால் ஏரிக்கு நீர் வரத்து இல்லை என்று பெரும் கவலையில் இருந்து நிலையில், கடந்த மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை அதனை தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என மாறி மாறி மழை பொழிவு ஏற்பட்டதால் ஏரியில் 50 சதவீத நீர் தேக்கமடைந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததால் விளை நிலங்கள் அனைத்தும் நீர் நிரம்பி கடல் போல் காட்சியளித்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி சங்கர் கூறுகையில் , வழக்கமாக கார்த்திகை மாதம் நெல் நாற்று விதைப்போம். பின் நடவு வேலை நடக்கும். இந்த ஆண்டு நடவுக்கு ஆட்கள் பற்றாக்குறையால் பலர் நெல்லை நேரடியாக விதைத்து விட்டனர்.
பயிர் முளைத்து வந்த வேலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி பாழாகிவிட்டது. தண்ணீர் வடிய போதிய வசதி இல்லை என்பதால் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. இது குறித்த மன வருத்தத்தை அளிக்கிறது இரண்டு நாட்களுக்குள் நீர் வடியாவிட்டால் அனைத்து பயிர்களும் அழுகிவிடும். முறையான வடிகால் வசதிகள் மற்றும் கால்வாய்த் துர்வாருதல் என்ற எந்த பணியும் முறையாக செய்யவில்லை என்பதால் இப்பகுதி விவசாயிகள் பல காலமாக போன்ற பருவ மழை காலங்களில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம் என்றார்.
கடந்த காலங்களில் ஏரிகள் முறையாக தூர்வாரப்படாததும், அதை அதிகாரிகள் கவனிக்காததுமே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu