பயனாளிகளுக்கு ரூ 1.50 கோடி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்: எம்எல்ஏ வழங்கல்

பயனாளிகளுக்கு  ரூ 1.50 கோடி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்: எம்எல்ஏ வழங்கல்
X

நகை கடன் தள்ளுபடி சான்றிதழை  பயனாளிகளுக்கு  எம்எல்ஏ க.சுந்தர் வழங்கினார்

உத்திரமேரூர் மாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் நகை கடன் வாங்கியிருந்த 520 பயனாளிகளுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டபேரவை விதி 110-இன் கீழ் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

தமிழக முழுவதும் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிகான சான்றிதழ்களை அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் கூட்டுறவு வங்கியில் சாலவாக்கம், சிறுபினாயூர், கிளகாடி உள்ளிட்ட 5 ஊராட்சியில் உள்ள 520 பயனாளிகளுக்கு 1.50கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடிகான சான்றிதழ்களை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் ஒன்றிய குழு துணை தலைவர் வசந்தி குமார், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!