காஞ்சிபுரம் அருகே நகை , பணம் கொள்ளை வழக்கு: மதிப்பீடு இல்லாமல் புகார் பதிவு

காஞ்சிபுரம் அருகே நகை , பணம் கொள்ளை வழக்கு: மதிப்பீடு இல்லாமல் புகார் பதிவு
X

 கொள்ளை சம்பவம் நடைபெற்ற அறை மற்றும் உடைக்கப்பட்ட லாக்கர்.

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் சுமார் 200 புவுன் நகை, 20 லட்சம் பணம் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி (52) .நேற்று அமாவாசை என்பதால் தனது குடும்பத்துடன் கணபதியின் மனைவி செல்வி இவர்களுடைய இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஐந்து பேரும் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் சென்று இரவு 7மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.கொள்ளை சம்பவம் குறித்து மாகரல் போலீசார்க்கு தகவல் தெரியபடுத்தினர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த கணபதி வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தை டிஎஸ்பி , எஸ் பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சிறப்பு தணிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.மேலும் கொள்ளை போன நகைகள் , பணம், பொருட்கள் குறித்து மதீப்பிடு இல்லாமல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் நான்கு பூட்டுகள் கொண்ட அதிநவீன லாக்கரை வாங்கி அதில் நகைகளை சேமித்து வைத்தது, அதையும் மர்ம நபர்கள் லாபகமாக உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கி வைத்துள்ளதும் அதை பொருத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் கொள்ளையடித்த நபர்கள் குறித்த பதிவுகள் ஏதும் இல்லை என்பதும் , இதை சாதகமாக கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் அதிர்ச்சி அளித்துள்ளது.



Tags

Next Story