உத்திரமேரூரில் ஓட்டுப்பெட்டிகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்
உத்தரமேரூர் ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டிகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஒன்றியங்களில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிட கடந்த 3 நாட்களாக வேட்பாளர்கள் அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு சீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பான ஓட்டுப்பெட்டிகள் கடந்த தேர்தலில் பயன்படுத்திய பின் பாதுகாப்பாக ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த ஓட்டுப்பெட்டிகள் எடுக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டு வண்ணம் தீட்டும் பணிகளில் உத்தரமேரூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 500க்கும் ஓட்டுப்பெட்டிகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என ஓட்டுகளை பதிவு செய்ய ஏதுவாக நான்கு பெட்டிகளும், அவசரத் தேவையெனில் கூடுதலாக ஒன்று என குறைந்தபட்சம் ஐந்து ஓட்டுப்பெட்டிகள் தேவைப்படும்.
உத்தரமேரூர் ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 61 கிராம ஊராட்சிகள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu