முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ 9.8 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை பணி துவக்கம்

முத்தியால்பேட்டை ஊராட்சி கவரை தெருவில் புதிய சிமெண்ட் சாலை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ சுந்தர் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார்.
Road Work Construction - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிங்க, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், முத்தியால்பேட்டை ஊராட்சியில் அடங்கிய கவரை தெருவில் பழுது அடைந்த சிமெண்டு சாலைக்கு மாற்றாக புதிய சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூபாய் 9,80,000.(ஒன்பது லட்சத்து என்பதுதாயிரம் ) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் இன்று காலை 8 மணிக்கு காஞ்சி மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும் சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிலையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரேமா ரஞ்சித்குமார் இப்பகுதியில் தரமான. சிமெண்டு சாலை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் இப்பணி துவக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu