‘‘ஒரு மரம் வெட்டினால் பத்து மரம் நடப்படும்’’ - அமைச்சர் எ.வ.வேலு
உத்திரமேரூர் புக்கத்துறை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் உடன் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்
விபத்தை குறைக்கும் நோக்கிலே சாலை விரிவாக்கம் நடைபெறுவதாகவும், இதற்காகவே மரம் வெட்டப்படுவதாகும், ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரத்தை நடுவோம் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று புக்கத்துறை விரிவு படுத்தப்படும் சாலையினை ஆய்வு மேற்கொண்டார்.
சாலையின் தரம், சாலையின் அடுக்குப் பிரிவு, கலவைகளின் அளவு உள்ளிட்டவை குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகள் அமைச்சர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
இதன் பின் செய்தியாளரிடம் பேசுகையில் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வந்தவாசி செங்கல்பட்டு சாலையில் உத்தரமேரூர் வழியாக அதிக வாகனங்கள் செல்வதால் இருவழிச் சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி தர கோரிக்கை விடுத்திருந்தார்.
அவ்வகையில் ரூபாய் 54 கோடி திட்ட மதிப்பில் இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி உத்திரமேரூர் - புக்கத்துறை வரை நடைபெற்று வருகிறது.
சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கிலேயே தரமான சாலைகள் அமைத்தல் மற்றும் குறுகிய சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் முதல்வரின் ஆலோசனை பேரில் நடைபெற்று வருகிறது.
சாலையோரம் பழமையான மரங்களை வெட்டுவதாக பலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பணி தூங்குவதற்கு முன்பு தமிழக முதல்வர் சாலையோரங்களில் உள்ள ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக பத்து மரத்தை நட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இப்பணிகள் முறையாக அரசு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை அவ்வப்போது நெடுஞ்சாலைத் துறை வேறு அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும், தரமான சாலை பொதுமக்களுக்கு விபத்து இல்லா பயணம் அளிக்கும் மலை வகையில் அதற்கான அறிவிப்பு பணிகள் அனைத்தும் அமைக்கப்படும்.
இப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பின் இப்பகுதியில் முதல்வரின் ஆலோசனைப்படி ஒரு மரத்திற்கு 10 மரம் நட திட்டமிட்டு அப்பணியும் நெடுஞ்சாலை துறையே மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஞானசேகர், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu