உத்திரமேரூரில் விடிய விடிய பெய்த கனமழை

உத்திரமேரூரில் விடிய விடிய பெய்த கனமழை
X

மாதிரி படம் 

உத்தரமேரூரில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வானிலை மாற்றம் மற்றும் காற்று திசை வேறுபாடு காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் லேசான சாரல் மழை துவங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக உத்தரமேரூரில் 94 மில்லி மீட்டரும், குன்றத்தூரில் 38 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 28.6 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 16 மில்லி மீட்டரும், காஞ்சிபுரத்தில் ஐந்து மில்லி மீட்டரும் வாலாஜாபாத்தில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தற்போதும் மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தின் முக்கிய விவசாய பகுதியாக விளங்கும் உத்தரமேரூரில் கனமழை கொட்டியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai future project