அனுமன் ஜெயந்தி: முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்

அனுமன் ஜெயந்தி: முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
X

முத்தியால் பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தியை ஓட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முத்தியால் பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தியை ஓட்டி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமர் தூதுவனனா அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும், வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன ஆஞ்சசநேயருக்கு அதிகாலையிலேயே பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சிறப்பு சந்தனக் காப்பில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சந்தனக்காப்பில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை நீண்ட வரிசையில் நின்று தரிசித்து அருள் பெற்றனர்.

Tags

Next Story