பாதுகாப்பற்ற நிலையில் அரசு நெல் கொள்முதல்நிலையம்
விவசாய மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் ஏரி , குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து தங்களது விவசாய பணிகளை துவக்கினர்.
தற்போது அறுவடை காலம் துவங்கியுள்ள நிலையில் அரசு அமைத்துள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட துவங்கின. இது போதுமானதாக இல்லை எனவும் கூடுதல் மையங்கள் துவக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் விவசாய சங்கம் , நீர் பாசன சங்கம் ஒருங்கிணைந்து பல இடங்களில் துவங்கியபோது தான் சிக்கல் உருவாகியது. போதிய இடவசதி, பாதுகாப்பு அற்ற நிலை, பழைய நிலையங்கள் செயல்படாது என பிரச்சனைகள் உருவாகியுள்ளது. கடந்த 7வருடங்களாக அவளூரில் இயங்கியதை இடமாற்றியதால் பல ஆயிரம் மூட்டை காத்து கிடக்கிறது. மேலும் 70 சதவீத அறுவடை இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதேபோல் புதியதாக உருவாக்கப்பட்ட காளூர் நிலையத்தில் கொள்முதல் செய்யபட்ட நெல்லை பாதுகாக்க போதிய மையம் இல்லை இல்லாததால் சாலையில் கிடக்கிறது நெல் மூட்டைகள். அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் தனியாரை காட்டிலும் அதிகம் லாபம் கிடைக்கும் என நம்பியுள்ள நிலையில், விவசாயிகளை வாழ வைப்பேன் என கூறும் அதிகாரிகள் நேரடியாக களத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்வு காணமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என பெண் விவசாயிகள் கூறும் நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu