சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்: இருவர் கைது

சாலவாக்கத்தில் குடோனில் பதுக்கிய குட்கா பறிமுதல்:  இருவர் கைது
X
சாலவாக்கத்தில், குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்து, இருவர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைத்திருந்போர் மீது கடும் நடவடிக்கையை, காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் மெயின்ரோட்டில் இயங்கி வரும் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதாக தொடர் புகார் சாலவாக்கம் காவல்துறையினருக்கு வந்தது. காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடையின் குடோனில், பலவகையான மான் மசாலா பொருட்கள், 250கிலோ பறிமுதல் செய்யபட்டது. இதன் மதிப்பு சுமார்₹1.70லட்சம் என தெரிகிறது. கடை உரிமையாளர் கான்ராம், சுக்கிரராம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!