உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

உத்தரமேரூர் பேரூராட்சியில் காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியா முழுவதும் தேசத்தந்தை என அனைவராலும் போற்றப்படும் மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை நினைவு கூறும் தூய்மை பாரதம் எனும் தூய்மை பணிகளை பல்வேறு அமைப்புகள் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் உத்தரமேரூர் பேரூராட்சி நுழைவு வாயிலில் 1950 ஆண்டு மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபா ஆகியோரின் திருஉருவச்சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இன்று காந்தியடிகளின் 153 வது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கும், அவரது மனைவி கஸ்தூரி பாய் சிலைக்கும் மாலை அணிவித்து பேரூராட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu