கோவில்களை தூய்மையாக வைக்கும் நோக்கில் பூக்கழிவு தொட்டி அமைப்பு

திருவாலீஸ்வரர் கோவில் கர்ப்பகிரகம் முன் வைக்கப்பட்டுள்ள பூக்கழிவு தொட்டி.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான திருக்கோயில்கள் உள்ளன. இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு பூ மற்றும் பூஜை பொருட்களை எடுத்துவந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.
இதுபோன்ற நிலையில் பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்களின் கழிவுகளை ஆங்காங்கே சிதறி விடுவதும் , சேகரிப்பு இடங்களில் போடாமல் திருக்கோயில்களில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்த போதும் பல்வேறு இடங்களில் கழிவுகள் இருப்பதைக் கண்டுள்ளோம்.
இந்நிலையில் ஐ.டி.சி. நிறுவனம் தனது பொது சேவைக்கு ஒரு பங்காக தமிழகத்தில் உள்ள இந்துக் கோயில்களில் பூக் கழிவுகளை சேகரிக்க அதற்கென ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கழிவு தொட்டி அமைப்பது என இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து முடிவு செய்தது.
இதற்கு ஒளிமயமான எதிர்காலம் என் பெயர் சூட்டி கோயில்களில் கர்ப்ப கிரக நுழைவு வாயில்களின் முன்பு இத்தொட்டி வைக்கப்பட்டு அது கழிவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழிப்புணர்வு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது..
இதனால் திருக்கோயில்கள் அனைத்தும் கழிவு இன்றி தூய்மையாக காணப்படும். அது மட்டுமன்றி திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தூய்மையான பகுதிகளில் சுகாதார காற்றுடன் அமர்ந்து தியானம் செய்து மகிழ்வை பெறும் வகையில் இது அமையும் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu