காஞ்சிபுரம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக போக்குவரத்து தடை
மாகரல் செய்யாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு வார காலமாகவே கனமழை பெய்து வருகிறது.
வியாழன் அன்று பெய்த 17 சென்டிமீட்டர் கனமழையால் காஞ்சிபுரம் பல பகுதிகளில் நீர் தேங்கியது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டிலிருந்து பாலாற்றுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து வெள்ளக்காடாக பாலாறு காட்டுகிறது.
இதேபோல் செய்யாற்றிலும் வெள்ளப்பெருக்கால் திருமுக்கூடல் பகுதியில் பல ஆறுகள் இணைந்து ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் கன அடி நீர் செல்கிறது. செய்யாற்றில் 50 ஆயிரம் கனஅடி நீர் செல்வதால் தரத்துக்கு மேல் அதிவேகத்துடன் நீர் செல்வதால் காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மாகரல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுக்கூடல் பாலாற்றில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் மேம்பாலத்தில் அதிக கனரக லாரிகள் செல்வதால் அதிர்வுகள் ஏற்படுவதகா பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கனரக லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசு தனியார் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu