வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகறல் - வாலாஜாபாத் சாலை சீரமைப்பு பணி தீவிரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த மாகறல்- வாலாஜாபாத் சாலை புணரமைக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள் துண்டிக்கப்பட்டு பல கிராம சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாலாறு, செய்யாறு பாலம் துண்டிக்கப்பட்டு தற்போது புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் உத்திரமேரூர் பகுதிகளிலிருந்து ஓரகடம் தொழிற்சாலை பகுதிகளுக்கு செல்ல மாகறல் - வாலாஜாபாத் சாலை வழியாக ஊழியர்கள் செல்லும் நிலையில் இச்சாலையில் நீண்டதூரம் மண் அரிப்பால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நீர் செல்வது குறைந்ததன் காரணமாக புணரமைப்பு பணிகள் துவங்கியது. தற்போது பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி விரைவாக சாலை போக்குவரத்தை துவங்க அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu