தசைப்பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர் மீட்பு

தசைப்பிடிப்பு  காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர் மீட்பு
X

கிணற்றில் குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக வெளியே வரமுடியாமல் தவித்த நபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

உத்திரமேரூர் அருகே கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது தசை பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கிய 45 வயதுடைய நபரை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த கிளாக்காடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன் மகன் சசிகுமார் வயது 45.

இவர் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.குளிக்கும் போது அவருக்கு கால் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கிணற்றிலிருந்து ஏற முடியாமல் அவதிப்பட்டு கூச்சலிட்டு உள்ளார்.இவரின் குரலை கேட்டு கிராம மக்கள் கிணற்றருகே வந்து பார்த்த போது இவர் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருவது தெரிய வந்தது.

கிராம மக்கள் அவரை கிணற்றிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தும் உடல் பருமன் காரணமாக பலன் அளிக்காததால் உத்திரமேரூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு மீட்புப் பணி நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் ஏற முடியாமல் அவதிப்பட்டு வந்த சசிகுமாரை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா