தென்னேரியில் விதிகளை மீறி மண் எடுப்பதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னேரியில் விதிகளை மீறி மண் எடுப்பதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தென்னேரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதைக் கண்டித்து  விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்திலுள்ள ஏரியில் அரசு விதிகளை மீறி மண் எடுத்து செல்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தென்னேரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதாகக்கூறி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தென்னேரி ஏரியில் எடுக்கும் மண் சாலை விரிவாக்க பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் தனியார் தொழிற்சாலைக்கு மண் விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் அளவுக்கு அதிகமாக ஆழம் எடுப்பதாகவும் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரியில் ஒன்றான தென்னேரியிலிருந்து 10 க்கும் அதிகமான கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.தண்ணீர் இருக்கும் ஏரியில் மண் எடுப்பது விவசாயத்தை பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.எனவே மண் எடுப்பதை முறையாக மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!