மாகரல்‌: செய்யாற்றில் அமைந்துள்ள மின் கம்பங்களை மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு

மாகரல்‌: செய்யாற்றில் அமைந்துள்ள மின் கம்பங்களை மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு
X

செய்யாறில் அமைந்துள்ள மின்கம்பம் . அதை ஆய்வு செய்ய சென்ற மின் வாரிய அலுவலர்.

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் அமைக்கபட்டுள்ள மின்கம்பங்களை மின் வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமம் அருகே அமைந்துள்ளது.இதன் அருகே செய்யாறு பல கிராம கரையோரம் சென்று திருமுகம் கூடல் பகுதியில் பாலாறுடன் இணைகிறது.

இப்பகுதியில் ரூ8கோடி செலவில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் தடுப்பணை அருகே செல்ல காவல்துறை தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆற்றின் குறுக்கே மாகரல் துணை‌மின்நிலைம் கரையோரம்‌ அமைந்துள்ளதால் அங்கிருந்து உத்திரமேரூர் நோக்கி 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல உயர் மின்னழுத்த கம்பம் ஆற்றில் நடப்பட்டுள்ளது.

நீர்வரத்து காரணமாக மின்கம்பங்களில் கீழ்ப்பகுதி அரிப்பு ஏற்பட்டு சாய்ந்த நிலையில் இருப்பதால் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை தற்போது மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மின் கம்பங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அறிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்கு சென்று குளிக்க தடை விதிக்க வேண்டும் என காவல்துறையிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி