காற்றில் பறந்த தேர்தல் ஆணைய விதிகள்

காற்றில் பறந்த தேர்தல் ஆணைய விதிகள்
X
பொதுமக்களை அழைத்து செல்ல சரக்கு வாகனுங்களுக்கு தடை விதித்ததை உத்திரமேரூரில் திமுகவினர் காற்றில் பறக்க விட்டனர்.

காஞ்சிபுரம் , உத்தரமேரூர் , செய்யூர் , மதுராந்தகம் ஆகிய 4தொகுதி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார். நான்கு தொகுதிகளை சுற்றி பல கிராமங்கள் உள்ளதால் அங்குள்ள தொண்டர்களைக் அழைத்துவர சரக்கு வாகனங்களை பயன்படுத்தினர்.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் தேர்தல் ஆணையம் நன்னடத்தை விதிகளை தெளிவுபடுத்திய நிலையில் முக்கியமாக கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வர பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் சரக்கு வாகனங்களை பயன்படுத்த கூடாது எனவும், பயணியர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கண்டிப்புடன் கூடிய நிலையில், இது போன்ற செயல்கள் விதிமீறல் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



Tags

Next Story