தேர்தல் விதி மீறல்- 2வது அரசு ஊழியர் சஸ்பென்ட்

தேர்தல் விதி மீறல்-  2வது அரசு ஊழியர் சஸ்பென்ட்
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ‌அருகே தேர்தல்விதிமீறல் தொடர்பாக 2வது ஊராட்சி செயலர் சஸ்பென்ட் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட திருப்புலிவனம், கிராம ஊராட்சி செயலாளராக, பணியாற்றி வருபவர் சுபாஷ் .இவர் ,திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவாக கிராம பொதுமக்களை ஒன்று திரட்டி மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்து சென்றார்.சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ காட்சிகளால் காஞ்சிபுரம் மாவட்ட கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் அரசுப்பணியிலிருந்து ,திருப்புலிவனம் ஊராட்சி செயலர் சுபாஷை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். உத்திரமேரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக 2வது செயலர்‌ சஸ்பென்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு