உத்தரமேரூர் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உத்தரமேரூர் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X
உத்தரமேரூர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை காஞ்சி மாவட்ட தேர்தல் பார்வையாளர் அமுதவள்ளி ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் பதிவான வாக்குகளை என்ன காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றிய அலுவலக எல்லையில் அமைந்துள்ள ஐந்து கல்லூரிகளை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து அங்கு வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான முதற்கட்டப் பணிகளை துவக்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் சவுக்கு தடுப்புகள், வேலி அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அமுதவல்லி உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஊரக முறைமை அதிகாரிகளுக்கு வழங்கிய பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!