திருமணத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி: வேட்பாளர் வாக்குறுதி

திருமணத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி: வேட்பாளர் வாக்குறுதி
X

உத்திரமேரூர் பேரூராட்சி நாலாவது வார்டு பகுதியில்,  திமுக வேட்பாளர் பரிமளா ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். 

உத்திரமேரூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பரிமளா ராஜேந்திரன், திருமண நிகழ்வுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

உத்திரமேரூர் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இதில், 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் பரிமளா ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இன்று அப்பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர், தேர்தல் வாக்குறுதிகளாக விவசாய பாசன கால்வாய்கள் மேம்படுத்தப்படும்;இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்; குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும், அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்படும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது மக்களின் வீடுகளில் திருமண சுப நிகழ்ச்சிகளுக்கு தலா 10 ஆயிரம் நிதி உதவி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story