/* */

இரட்டை ஆட்சி முறைக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது: அமைச்சர் வேலு

இரட்டை ஆட்சி முறை செய்ய தமிழக ஆளுநர் முயற்சிக்கிறார். இது ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என எ.வ.வேலு உத்திரகூறினார்

HIGHLIGHTS

இரட்டை ஆட்சி முறைக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது: அமைச்சர் வேலு
X

உத்திரமேரூர் கூட்டத்தில் பேசும் அமைச்சர் எ வ வேலு

1920ல் நீதி கட்சி ஆட்சியில் நடைபெற்றது போல் தற்போது இரட்டை ஆட்சி முறை செய்ய தமிழக ஆளுநர் முயற்சிக்கிறார்.. இது ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என உத்திரமேரூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றிய , பேரூர் சார்பில் மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரான சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் ஞானசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்த 95 ஆண்டுகளில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை வாழ்ந்தவர். உலகிலேயே 60 ஆண்டுகள் தொடர்ந்து எம்எல்ஏ வாக பதவி வகித்த பெருமைக்குரியவர்.போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். இந்திய வரலாற்றிலேயே 5 முறை முதல்வராக இருந்தவர்.

ஆளுநர் என்பவர் மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுக்கு இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை மாநிலத்தின் செயல்பட வேண்டும்,

1920ல் நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிக்கட்சி வென்று அப்போது 3 அமைச்சர்கள் மட்டுமே முதல்வருடன் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு சுகாதாரம் விவசாயம் பத்திர துறை உள்ளிட்டை மட்டும் வழங்கிவிட்டு அப்போதைய ஆளுநர் பிற துறைகளை அனைத்தையும் தன் கீழ் கொண்டு வந்து செயல்பட நினைத்து இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்தினார்.

ஆனால் தற்போதைய தமிழக ஆளுநரோ , அதேபோல் தற்போது இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்த நினைப்பது ஒருபோதும் திராவிட மாடல் ஆட்சியில் எடுபடாது என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் ஆளுநர்அரசுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என கூறினார்.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நாகன், சுகுமார், பேரூர் கழக செயலாளர் பாரிவள்ளல் , உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் , ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jun 2023 5:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்