மனு வாங்கி ஏமாற்றும் அரசு அல்ல, நிறைவேற்றும் அரசு திமுக : தா.மோ.அன்பரசன்

மனு வாங்கி  ஏமாற்றும் அரசு அல்ல, நிறைவேற்றும் அரசு திமுக : தா.மோ.அன்பரசன்
X

வாலாஜாபாத் யூனியனில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ. அன்பரன் பெற்றார்.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதி மக்களிடம் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களை இன்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் பெற்று கொண்டார்.

முன்னதாக சுமார் 700க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பதிவு செய்து வரிசையில் நின்று அமைச்சரிடம் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர், உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டது . அதன் அடிப்படையில் தற்போது அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பொதுமக்கள் மனுக்களை கொடுக்க வந்துள்ளனர்.

அவர்களின் எண்ணப்படியே பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய அத்தாட்சி படிவம் தரப்பட்டுள்ளது. மற்றவர்களைப்போல் மனுக்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றுகின்ற அரசு திமுக அரசு அல்ல எனவும் விரைவில் மக்களுக்கான தீர்வு இதே பகுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்கே தேவேந்திரன், துணைத் தலைவர் பி சேகர், மாவட்ட பிரதிநிதி சுகுமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!