காஞ்சியில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரங்கள, பொதுமக்களுக்கு வழங்கிய எம்எல்ஏ

காஞ்சியில் 100 நாள் சாதனை துண்டு பிரசுரங்கள, பொதுமக்களுக்கு  வழங்கிய எம்எல்ஏ
X

தமிழகரசின் 100 நாள் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 நாட்கள் சாதனை துண்டு பிரசுங்களை பொதுமக்களுக்கு எம்எல்ஏ சுந்தர் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. பொறுப்பேற்ற 100 நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்,மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டம், பொது மக்கள் அளிக்கும் மனுவுக்கு உடனடி தீர்வு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை 100 நாட்களில் பல சாாதனைகளை நிகழ்த்தியுள்ளார்..

அதனை கொண்டாடும் விதமாக உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் 100 நாள் சாதனை செயல்பாடுகள் அடங்கிய விளக்க துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு உள்ளிட்ட பலருக்கும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் வீதி வீதியாகச் சென்று துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், மணி,பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture