தெய்வீக ஓவியங்கள் கண்காட்சி ஸ்ரீவிஜயேந்திரர் துவக்கி வைத்தார்
தெய்வீக ஓவியங்கள் கண்காட்சியை பார்வையிடுகிறார் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.உடன் சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன்
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவரின் மணி மண்டபம் அமைந்துள்ளது. இங்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 24 ஆம் தேதி முதல் செப்.20 ஆம் தேதி வரை தங்கியிருந்து சாதுர் மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகிறார்.
இந்நாட்களின் போது மணிமண்டபத்துக்கு வரும் பக்தர்கள் பார்வையிடுவதற்காக சென்னை அம்பத்தூரில் உள்ள டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனத்தின் சார்பில் தெய்வீக ஓவியங்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியானது ஆக.26 ஆம் தேதி முதல் வரும் செப்.20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இறைநெறி ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த ஓவியங்கள் 100க்கும் மேற்பட்டவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் , டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.ஆர்.ராமநாதன் முன்னிலை வகித்தார்.
கண்காட்சியை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து பார்வையிட்டார். விஜயேந்திரருக்கு எந்தெந்த கோயில் மூலஸ்தான ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொன்றாக ஓவியர் மணிவேலுவும் அவரது மகன் ஓவியர் ம.ஆறுமுகமும் விளக்கி கூறினார்கள்.
இதன் பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியது..
பல்வேறு கோயில்களில் மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களை ஒரே நேரத்தில் நேரில் பார்த்தது போன்று தத்ரூபமாக வரையப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
கடந்த 1964 ஆம் ஆண்டு மகா பெரியவர் சுவாமிகள் தெருக்கூத்து, மகாபாரதம், சங்கீதம் ஆகியனவற்றை கிராமங்கள் தோறும் எடுத்து சென்று பக்தி நெறியை வலுப்டுத்தினார்கள்.
வியாச பாரதமாக இந்தியா உருவாக வேண்டும்.மகா பெரியவர் சுவாமிகளின் கனவும் அதுவாகத்தான் இருந்தது. இயல்,இசை,நாடகம்,சங்கீதம் போன்ற கலைகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu