ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்ற வக்கீலுக்கு கொலை மிரட்டல் - எஸ்பி அலுவலகத்தில் புகார்

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்ற வக்கீலுக்கு கொலை மிரட்டல் - எஸ்பி அலுவலகத்தில் புகார்
X
வாலாஜாபாத் - ஊத்துக்காடு பகுதியில் கால்வாயில் தனிநபர் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்.

செங்கல்பட்டு மாவட்டம் , செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் வழக்கறிஞர்.மு.முனீஸ்வரன். இவர் அம்பேத்கர் சேனா தமிழ்நாடு என்ற அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை மீட்டுத் தருதல், அரசு இயற்கை வளங்கள் , நீர்நிலைகளை ஆக்ரமிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து மீட்டல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

இவரது அமைப்பிற்கு வந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு கிராமத்தில் கோயில் குளத்தில் இருந்து செல்கிற வழியில் கால்வாயை தனிநபர்கள் ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

அதனை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது முனீஸ்வரனை ஆக்கிரமிப்பாளர் ஜெயராமன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் அதற்கான ஆடியோ பதிவு செய்யப்பட்டு இன்று அதன் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் முனீஸ்வரன் மற்றும் அம்பேத்கர் சேனா உறுப்பினர்கள் மனு அளித்தனர். இம் மனுவை விசாரிக்க வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு எஸ்பி பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!