காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பூசி முகாமில் மேற்கூரை சரிந்ததால் பரபரப்பு

காஞ்சிபுரம்: கொரோனா  தடுப்பூசி முகாமில்  மேற்கூரை சரிந்ததால் பரபரப்பு
X

உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த பள்ளியின்  மேற்கூரை உடைந்து விழுந்தது.

உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த பள்ளியின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்றாவது கட்டமாக தடுப்பூசி முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 7 மணி முதல் அப்பகுதி மக்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிற்பகல் 2 மணி அளவில் பள்ளி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை சரிந்து ஓடுகள் அனைத்தும் தரையில் சிதறியது.

அப்போது பொதுமக்கள் யாரும் இல்லாததால் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அலறி அடித்துக்கொண்டு அருகிலிருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் சென்றனர்.

இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த ஒரு காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இதுபோன்ற உபயோகமற்ற கட்டிடங்களை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இங்கு காலை முதல் அதிக அளவில் கூட்டம் காணப்பட்ட நிலையில் இன்று 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்