காஞ்சிபுரத்தில் தொற்றில் இருந்து குணமடைந்து, சிறுவர் இல்லம் திரும்பிய குழந்தைகளுடன், கலெக்டர் ஆர்த்தி கேக் வெட்டி மகிழ்வித்தார்

காஞ்சிபுரத்தில்  தொற்றில் இருந்து குணமடைந்து,   சிறுவர் இல்லம் திரும்பிய குழந்தைகளுடன், கலெக்டர் ஆர்த்தி கேக் வெட்டி மகிழ்வித்தார்
X

காஞ்சிபுரத்தில் தொற்றில் இருந்து குணமடைந்து சிறுவர் இல்லம் திரும்பிய குழந்தைகளுடன் கலெக்டர் ஆர்த்தி கேக் வெட்டி மகிழ்ந்தார்.

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் கொரோனா பாதித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய குழந்தைகளுடன், ஆட்சியர் ஆர்த்தி கேக் வெட்டி மகிழ்வித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கல்யாண் பூண்டி கிராமத்தில் அமைந்துள்ளது சைல்டு எவர் சிறுவர் இல்லம்.இங்கு ஆண் பெண் என 73 பேர் தங்கி அங்குள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்பு இந்த இல்லத்தில் உள்ள ஊழியரின் தொடர்பால் 4 சிறுமிகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு தங்கி உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏழு ஊழியர் , 32 சிறுவர் சிறுமியர்கள் என மொத்தம் 43 பேர் உறுதிப்பட்டு அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

மேலும் தொற்று பாதிக்காதவர்கள் எழுச்சூர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர்.இவர்கள் அனைவரும் நேற்று சிறுவர் இல்லம் திரும்பினர்.

இன்று அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து குதுந்தைகளுன் கேக் வெட்டி மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கினார்

இதில் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருடன் ஒரு மணி நேரம் இனிமையாக பேசி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக ஆட்சியரிடம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil