முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100% செயல்படுத்திய ஊராட்சி செயலருக்கு பாராட்டு

முதல் தவணை கொரோனா தடுப்பூசி 100% செயல்படுத்திய ஊராட்சி செயலருக்கு பாராட்டு
X

கருவேப்பம்பூண்டியில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100% சதவீதம் செயல்படுத்திய ஊராட்சி செயலர் அமரேசனுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கேடயம் பரிசு வழங்கினார்.

கருவேப்பம்பூண்டியில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100% சதவீதம் செயல்படுத்திய ஊராட்சி செயலர் அமரேசனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டி கேடயம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு போட்டு பரவலை வெகுவாக குறைத்தது.

இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவேப்பம்பூண்டி கிராம ஊராட்சியில் மொத்தமுள்ள 1800 நபர்களில் 18 வயதுக்கு மேல் உள்ள 1400 நபர்களை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு முதல் தவணை ஊசி 16 முகாம்களில் 100% போடப்பட்டுள்ளது.

முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்கியதை கண்ட ஊராட்சி மன்ற செயலாளர் ஆர் அமரேசன் கிராம ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தி அவர்கள் மூலம் அவர்கள் உடல்நலத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் 570 நபர்களுக்கு முதலில் போடப்பட்டது.

மேற் கண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் தாமாகவே முன்வந்து முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 100 சதவீத இலக்கை எட்டியுள்ளனர். தற்போது இவர்கள் அனைவருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்ய வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கொரோனா காலத்தின் சிறப்பாக பணியாற்றிய பள்ளிககு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கருவேப்பம்பூண்டி ஊராட்சி மன்ற செயலர் அமரேசனுக்கு கேடயம் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கா சுந்தர் , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!