ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை அருகில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி அலுவலகம் அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே காரில் வந்த செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் செம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ரூ. ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாலாஜாபாத் வட்டாட்சியரால் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!