மருத்துவ தம்பதியிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்

மருத்துவ தம்பதியிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்
X

உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் மருத்துவ தம்பதியினரிடமிருந்து ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வந்த பணம் ரூ.1.27லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பறக்கும்படை சோதனைகளை தீவிரப்படுத்த மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட பெருநகர் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வந்தவாசி பகுதியை சேர்ந்த மருத்துவ தம்பதியினரின் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணம் ரூ. 1.27 லட்சம் பணத்தினை பறிமுதல் செய்து உரிய வழிமுறைகளை பின்பற்றி அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!