நத்தபேட்டை ஏரியில் கொத்து கொத்தாக சாகும் மீன்கள்; பொதுமக்கள் அச்சம்

நத்தபேட்டை ஏரியில் கொத்து கொத்தாக சாகும் மீன்கள்; பொதுமக்கள் அச்சம்
X

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்.

நத்தப்பேட்டை ஏரியில் மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதப்பதால், நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அருகே அமைந்துள்ளது நத்தப்பேட்டை கிராமம். இங்கு வாலாஜாபாத் வட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று நத்தப்பேட்டை ஏரிதான்.

இதனை நம்பி நத்தப்பேட்டை , கிளியனூர் உள்ளிட்ட பல கிராம விவசாயிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக பலமுறை விவசாய கூட்டத்திலும், சமூக ஆர்வலர்கள் என பலர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகவும் நேரிலும் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இந்த ஏரியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்தால் துர்நாற்றம் வீசியதால் அப்போது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பேரில் உடனடியாக செத்த மீன்களைச் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று குடியிருப்புப் பகுதி ஓரம் துர்நாற்றம் வீசி இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஏரிக்கரை மதகு அருகே கொத்துக் கொத்தாக மீன்கள் செத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செத்துப்போன அகற்றாவிட்டால் தற்போது பருவமழை காலம் என்பதால் நோய் எளிதில் பரவும் அபாயம் ஏற்பட்டு விடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil