காஞ்சிபுரத்தில் அலுவகலகம் இல்லாமல் அவதியுறும் சித்தனாக்காவூர் ஊராட்சி
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட,து சித்தனக்காவூர் கிராம ஊராட்சி. இந்த கிராம ஊராட்சிக்காக புதிய ஊராட்சி மன்றக் கட்டப்பட்டு வருகிறது.
இதன் அருகே தனியார் தொண்டு நிறுவனம மூலம் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் புதிய ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்று உள்ளதால் பழைய கிராம ஊராட்சி தலைவரான தேவராஜ் என்பவர் கட்டிடத்தின் சாவியை ஒப்படைக்க மறுத்து வருவதாக புதிய ஊராட்சி மன்ற தலைவர் உத்தரமேரூர் ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாலவாக்கம் காவல் நிலையத்தில் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் இடம் நேரடியாக சென்று கட்டிட சாவியை ஒப்படைக்க கூறியும் தற்போதுவரை ஒப்படைக்கவில்லை.
ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளதாகவும் இதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புகார் அளித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்பதால் தற்போது பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.
இந்நிலையில் புதிய கட்டிட பணியை மெத்தனமாக உள்ளதை கண்காணிக்க தவறியதும் சாவியை திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்காததால் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற செயலர் முத்தம்மாள் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போது மழைக்காலம் என்பதால் கிராம ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி மன்றம் கூட்டம் கூட இடமில்லாததால் ஊராட்சி மன்றக் கூட்டம் நடு சாலையில் நடக்கும் என தலைவர் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu