சித்தனக்காவூர் : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வருமா ?

சித்தனக்காவூர் : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  மக்கள் பயன்பாட்டிற்கு வருமா  ?
X

தண்டரை கிராமத்தில் கட்டப்பட்டு , பயன்பாட்டில் இல்லாத புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி.

சித்தனக்காவூர் ஊராட்சி தண்டரை கிராமத்தில் முப்பதாயிரம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சித்தனக்காவூர் ஊராட்சி.

அந்த ஊராட்சிக்கு உட்பட்ட தண்டரை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2020 - 2021 ம் நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இந்த உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியானது இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் உள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது லேசாக சிதிலமடைந்து வருகிறது, மக்கள் வரி பணத்தில் கட்டிய இந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியானது வீணாகி வருவது அப்பகுதி மக்களை மேலும் வேதனைப்படுத்தி வருகிறது.

அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை என்று கூறும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் இதன் மீது கவனம் செலுத்தி இந்த உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
video editing ai tool