முடியாது .. முடியாது அதெல்லாம் முடியவே முடியாது.- கட்டன் ரைட்டாக பேசிய அமைச்சர்
அமைச்சர் அன்பரசன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக சார்பில் உங்கள் தொகுதியில் முதல்வர் என் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அனைத்து மனுக்களும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
இந்நிலையில் திமுக தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க தனித் துறையை நியமித்து தீர்வு கண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மீண்டும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் , வாலாஜாபாத் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
முதல் நிகழ்வாக உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் 70% மனுக்கள் தீர்வு காணப்பட்டு தற்போது மனுக்கள் அளித்தால் தீர்வு கிடைக்கிறது என இந்த அரசை நம்பி தற்போது மக்கள் மீண்டும் தங்கள் குறையை தெரிவிக்க வந்துள்ளனர்.
மீதமுள்ள 30% மனுக்கள் நீர்நிலைகளில் , குட்டை பகுதியில் பட்டா கேட்டு என்பதால் தான் அது நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் , இந்த திமுக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்று பட்டா வழங்க முடியவே முடியாது என கட்டன் ரைட்டாக பொதுமக்களிடம் தெரிவித்து அதிரடியாக பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், துணைத்தலைவர் நித்யாசுகுமார், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu