உத்திரமேரூர் அருகே கல்குவாரி லாரிகளை, மக்கள் சிறை பிடித்து போராட்டம்
உத்திரமேரூர் அருகே கல்குவாரி லாரிகளை பொதுமக்கள் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்டது காவாந்தண்டலம் கிராமம். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் மாகரல் பகுதியில் இயங்கிவரும் கல் குவாரிகளில் இருந்து காவாந்தண்டலம் வழியாக சென்னை செங்கல்பட்டு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டுமானப் பொருட்களான எம்சாண்ட் எடுத்துச் செல்கிறது.
கனரக லாரிகள் அதிக அளவில் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், வாகன விபத்து நடைபெறுவதாகக் கூறி அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவ்வழியாக வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
24 மணி நேரமும் கனரக லாரிகளால் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறுகள் பிரச்சினைகளால் தவித்து வருவதாகவும், அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்கி உயிர் மற்றும் உடல் உறுப்புகளை இழக்கும் நிலையில் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu