அரசு பேருந்து சேவை நிறுத்தம்: 3 கிமீ நடைபயணம் சென்று செல்லும் அவலம்

அரசு பேருந்து சேவை நிறுத்தம்: 3 கிமீ நடைபயணம் சென்று செல்லும் அவலம்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்

காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மூன்று கிமீ நடைபயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்

காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம். கிராமத்திற்கு கூட்டு சாலையில் இருந்து 3 கிமீ தொலைவில் கிராமம் அமைந்துள்ளது, மேலும் இதனைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் தூரம் வயலூர் எனும் சிற்றூரும் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் தொழில், படிப்பு , மருத்துவம் உள்ளிட்ட சேவைகளுக்காக நகரத்தையே நாட வேண்டியுள்ளது. இவர்களுக்காக தனியார் பேருந்து சில சேவைகளையும், அரசு பேருந்து சில சேவைகள் குறிபிட்ட நேரங்களில் மட்டுமே மேற்கொண்டு வந்தது.

அரசு பேருந்து T34 மலையான்குளம் கிராமம் செல்லும் பேருந்து ஆர்ப்பாக்கம் கிராமம் வழியாக செல்வது வழக்கம். இதில் அரசு பேருந்தில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் வருவது வழக்கம்..இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எந்தவித முன்னறிவிப்புமின்றி பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரமும் வயலூர் கிராம மக்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் பகுதிக்கு சென்று வருகின்றனர். நிறுத்தப்பட பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags

Next Story
ai healthcare technology