அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகள் எரிப்பு

அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகள்  எரிப்பு
X
ஒரகடம் பகுதியில் தொழிற்சாலை கழிவுகளை அனுமதியின்றி ஏரி பகுதிகளில் தீயிட்டுக் கொளுத்தும் சம்பவம் அதிகரித்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்பேட்டை பகுதியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இங்கு இயங்கிவரும் நிலையில், தொழிற்சாலை கழிவுகளை முறைப்படியாக எரிக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழிற்சாலைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை தரம் பிரிக்காமல், ஒட்டுமொத்தமாக வாலாஜாபாத் தாம்பரம் சாலையிலுள்ள ஏரி பகுதிகளில் மர்ம நபர்கள் கொட்டி தீயிட்டு எரிப்பதால், அதிலிருந்து கரும்புகை வெளியேறி சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டு மாடிகளில் கருமையான துகள்கள் படிவதாக மக்கள் கூறினர்.

இதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்