உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து  நகை பணம் கொள்ளை
X

உத்திரமேரூரில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் காஜாபேக். இவர் சிறு வணிக வியாபாரியாக அப்பகுதியில் இருந்து கொண்டு வசித்து வரும் நிலையில் அவரது உறவினரின் துக்க நிகழ்விற்காக ஆரணிக்கு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருந்தது.

பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகை, ரூபாய் 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் புடவைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உத்திரமேரூர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!