ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் உடைப்பு : கொட்டும் மழையிலும் சீர் செய்த ஊராட்சி

ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய் உடைப்பு  : கொட்டும் மழையிலும்  சீர் செய்த ஊராட்சி
X

கால்வாய் உடைப்பை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யும் காட்சி

காஞ்சிபுரம் அருகே ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை ஊராட்சி நிர்வாகம் கொட்டும் மழையிலும் சீர் செய்தது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் காவந்தண்டலம். இக்கிராமத்தில் விவசாயத்தினையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள கிராம ஏரிக்கு செய்யாற்றின் கரையோரம் உள்ள வரத்து கால்வாய் மூலம் நீர் செல்கிறது.

வடகிழக்கு பருவமழைக்கு முன்பு புதியதாக பதவியேற்ற தலைவர் ராதாவிஜியகுமார் அக்கிராம விவசாயிகளுடன் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொண்டதால் முதல் மழையில் தடுப்பணை நிரம்பி இக்கிராம ஏரிக்கு 60சதவீத நீர் சென்றது.

கடந்த வாரம் முழுவதும் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக செய்யாறில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று காலை வரத்து கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் மீண்டும் ஆற்றில் கலந்தது. நீர் வரத்து தடைப் பட்டதை கண்ட விவசாயிகள் அதிர்ச்சியுற்றனர்

இதையறிந்த கிராம ஊராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுப்பணித்துறையுடன் இணைந்து தடுப்பணை மதகினை மூடி உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கொண்டு உடைப்பினை சரிசெய்து வருகின்றனர்.

உரிய நேரத்தில் நீரின் அருமை கருதி துரிதமாக செயல்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரை, கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!