நீரில் மூழ்கி இறந்த ஊர்காவல் படை வீரர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

நீரில் மூழ்கி இறந்த ஊர்காவல் படை வீரர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
X

படகு மூலம் தேடும் தீயணைப்புத் துறையினர்

பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்டனர்

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார்..

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பழையசீவரம் அடுத்த திருமுக்கூடல் சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்பு அங்குள்ள பாலாற்றில் தனது நண்பர்கள் ஆறு பேருடன் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தரணிகுமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் படகு மூலம் கடந்த இரண்டு நாட்களாக தரணிகுமாரை தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையெடுத்து அவரது உடலை கைபற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!