/* */

ஏழை மக்களுக்கான வீடுகள் இது..தரமாக கட்டுங்கள்: ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியினருக்கான 443 குடியிருப்பு வீடுகள் ஐந்து இடங்களில் கட்டப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

ஏழை மக்களுக்கான வீடுகள் இது..தரமாக கட்டுங்கள்: ஆட்சியர் ஆர்த்தி எச்சரிக்கை
X

வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் இருளர் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் திட்டத்தினை ஆய்வு செய்த ஆட்சியர் ஆர்த்தி.

ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற முறையில் கட்டுவதா? தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் கொந்தளித்து ஒப்பந்ததாரரை எச்சரித்து ஒப்பந்தத்தை ரத்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பிடித்து கொடுப்பேன் என ஆய்வில் ஆட்சியர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஐந்து ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 443 வீடுகள் கட்டும் பணி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

அவ்வகையில் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் சுமார் ரூ.3.5கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதனை இன்று தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் ஆய்வு செய்ய வருகைப் புரிவதற்கு முன்னர் அக்குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இருளர் பழங்குடியினருக்காக ஒவ்வொரு குடியிருப்புகளும் ரூ.4 லட்சத்தி 62ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது தெரிய வந்தது. இதைக் கண்டு கடும் அதிர்ச்சையடைந்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து இக்குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர் பாபு என்பவரை அழைத்து கட்டுமான முறைகள் சரி இல்லை என்றும், முறையாக பணிகள் நடைபெறவில்லை என அவர் மீது குற்றம் சாட்டினார்.

குறிப்பாக ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற வகையில் கட்டுவது எவ்விதத்தில் நியாயம்? என்று கேட்ட அவர், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பலமுறை நடந்த கூட்டங்களில் அறிவுறுத்தியும், நீங்கள் இவ்வாறு பணியை மேற்கொண்டுள்ளீர்கள். இது போன்று ஈடுபட்டால் தங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிடித்து தான் கொடுக்க வேண்டும் என்றும், தரமான முறையில் கட்டித்தர முடியவில்லை என்றால் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடும் என கடுமையாக எச்சரித்தார்.

மேலும் தரமற்ற வகையில் குடியிருப்புகளை கட்டும் இந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்து மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணியை மேற்கொள்ளுங்கள் என மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவியிடம் அறிவுறுத்தினார்.

ஏழைகளுக்காக கட்டுப்படும் குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்படுவதை கண்டறிந்து ஒப்பந்ததாரரை எச்சரித்ததும், மேலும் நல்ல தரமான முறையில் குடியிருப்புகளை கட்டி கொடுக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்ட மாவட்ட ஆட்சியரின் இந்த செயல்பாடுகள் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 3 Jan 2023 11:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் ஒத்திகை பயிற்சி
  2. கோவை மாநகர்
    யானைக்கூட்டத்துடன் தாயை பார்க்க வந்த குட்டி யானை
  3. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  4. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
  5. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  6. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!
  7. தொண்டாமுத்தூர்
    மோசடி வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு